Union Budget 2025 Highlights in Tamil

Union Budget 2025 Highlights in Tamil

R
Ranjith Kumar R Billianz Academy
Feb 13, 2025 (1 year ago)
1 min read
185 views

இந்தியா வரலாற்றில் பட்ஜெட் :

 7th April,1860=>இந்தியாவின் முதல் பட்ஜெட்-ஐ அன்றைய நிதியமைச்சர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.

1947-48 =>லியாகத் அலிகான் இந்தியாவில் முதல் இடைக்கால புக்கிட் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தார்.

 26th Nov 1947=>R.k. சண்முகம் செட்டி சுந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை :

பட்ஜெட் தாக்கல் செய்தல் => ஈரவைகளிலும் பொதுவிவாதம் நடைபெறும் => தனிநபர் அமைச்சர்களின் கோரிக்கையை நிலைக்குழு ஆராய்தல்=> மக்களவையில் வாக்களித்தல் & விரிவான விவாதம் நடைபெறும் => நிதி மசோதா அமலாகுதல்.

முக்கிய ஆவணங்கள்:

சரத்து 112 =>வருடாந்திர நிதிநிலை அறிக்கை 

சரக்கு 113=> மானிய கோரிக்கை

சரக்கு 110=>நிதி மசோதா 

பட்ஜெட் 2025-26 மையக்கரு (Theme): "sabka vikas"

பட்ஜெட் 2025-26 சிறப்பம்சங்கள்

  • சராசரி மாத வருவாய் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை; இதனால் நடுத்தர வகுப்பினரின் வீட்டு சேமிப்பு மற்றும் நுகர்வை அதிகரிக்கும்

  • புதிய வரித் தொகுப்பில் மாத ஊதியம் பெறும் பிரிவினர் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

  • வளர்ச்சியின் 4 எஞ்சின்களை மத்திய பட்ஜெட் அங்கீகரிக்கிறது-வேளாண்மை, எம்எஸ்எம்இ, முதலீடு, ஏற்றுமதி.

  • குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

  • துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் “பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம்” தொடங்கப்படும்.

  • திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

  • நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்பதுடன் நிறைவு செய்ய நிதியாண்டு 2025 மதிப்பிட்டுள்ளது, நிதியாண்டு 2026-ல் இதனை 4.4 சதவீதத்திற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • எம்எஸ்எம்இ-களுக்கு உத்தரவாதத்துடனான கடன் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • “இந்தியாவில் தயாரியுங்கள் (மேக் இன் இந்தியா”) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர, பெருந்தொழில்களையும் உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.

  • அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.

  • மொத்தம் ரூ.500 கோடி முதலீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்.

  • வங்கிகள் மூலம் பிரதமரின் ஸ்வநிதி விரிவாக்கம், ரூ.30,000 வரம்புடன் யுபிஐ-யுடன் இணைக்கப்பட்ட கடன் அட்டைகள்.

  • செயலி (கிக்) பணியாளர்கள் அடையாள அட்டை பெறுவார்கள், இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ளலாம். பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறலாம்.

  • வளர்ச்சி மையங்களாக நகரங்கள் என்ற திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியம்.

  • ரூ.20,*** கோடி முதலீட்டுடன் சிறிய வகை ஈனுலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அணுசக்தி இயக்கம்.

  • 120 புதிய இடங்களுக்கான இணைப்பை விரிவுப்படுத்த திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டம்.

  • மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமானத்தை வேகப்படுத்த ரூ.15,*** கோடியில் ஸ்வாமிக் (குறைந்த செலவில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதிக்கு சிறப்பு சாளரம்) நிதியம் அமைக்கப்படவுள்ளது.

  • தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • 1 கோடிக்கும் அதிகமான மூலப்பிரதிகளை(கையெழுத்துப்பிரதிகள்) உள்ளடக்கி மூலப்பிரதிகளை கணக்கிடவும், பாதுகாக்கவும் ஞான பாரத இயக்கம்.

  • காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.

  • பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் அதிகமான பிரிவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு மக்கள் விஸ்வாச மசோதா 2.0 அறிமுகம் செய்யப்படும்.

  • புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.

  • வருவாயில் வரி பிடித்தம் செய்து செலுத்துவதில் கால தாமதம் குற்றமற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

  • வாடகை வருவாயில் வரிப்பிடித்தம் ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு.

  • புற்றுநோய், அரிய மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 36 உயிர்காக்கும் மருந்துகள், மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • ஐஎஃப்பிடி-க்கான(தட்டையான காட்சித் திரை) அடிப்படை சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிப்பு, ஓபன் செல்களுக்கான(டிவியின் உட்கூறு) அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாக குறைப்பு.

  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஓபன் செல் பகுதிகள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வை விலக்கு.

  • மின்கல உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கு கூடுதலான மூலதனப் பொருட்கள், செல்பேசிகளுக்கான பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • கப்பல் கட்டுமானத்திற்கான கச்சாப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு ** ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.

  • குளிர்ப்பதனம் செய்யப்பட்ட மீன்பசை மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

R
Ranjith Kumar R
Author at Billianz Academy

Sharing knowledge on cutting-edge technology, full-stack web development, industry trends, and professional career pathways for students and professionals.

Back to Blog
Table of Contents
0
Article Information
  • Category: General
  • Published: Feb 13, 2025
  • Reading Time: ~1 minutes
  • Total Views: 185
Upskill Today
Advance Your Tech Career

Master Full-Stack Web Development, Data Analytics, Python, and UI/UX with 100% placement assistance at Billianz Academy.

Quick Share
Continue Reading

Recommended Articles

More insights and tutorials curated for you in this category.

After Independence General
Jul 05, 2025
After Independence

After Independence

1 year ago Read Post
Moovalur Ramamirtham General
Jul 05, 2025
Moovalur Ramamirtham

Moovalur Ramamirtham was a Tamil social reformer, author, and political activist of the Dravidi...

1 year ago Read Post
Dr. Muthulakshmi Reddy General
Jul 05, 2025
Dr. Muthulakshmi Reddy

Dr. Muthulakshmi Reddy who holds many firsts to her name was an outstanding Indian woman of her...

1 year ago Read Post

Are you ready for a more great Conversation?